மறையுரை 13th MAY 2007

May 13, 2007

மறையுரை:

 

இன்றைய நற்செய்தி ஒன்றிப்பின் நற்செய்தி. யேசு இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் மோட்சத்திற்கு எழுந்து சென்றார். இது திருச்சபைக்கு ஒரு ஜெபமாகும். இந்த எழுந்தேற்றத்தில் தான் அவர்சேக்ரமன்ட்எனப்படும், அற்புத சடங்கை இந்த உறவின் மூலம் ஏற்படுத்தினார். யேசுவும், தந்தையும் ஒன்றாய் இருப்பது போல, நாமும் ஒன்றாய் இணைந்து இருக்க வேண்டும், இதன் மூலம் நாம் ஒன்றாய் இருப்பதற்கு சாட்சியாக இருக்கலாம். இந்த ஒற்றுமை நிரந்தரமாகவும், உறுதியாகவும், தியாகம் செய்தும், நிபந்தனையற்ற அன்பு செய்தும், இவ்வுலகிற்கு கடவுளின் அன்பினை நாம் காட்டவேண்டும். கடவுளின் அன்பு உண்மையானது என்பதை நாம் இவ்வுலகிற்கு நிரூபிக்கவேண்டும். அவரின் அன்பு நிரந்தரமானது, உறுதியானது, நிபந்தனையற்றது, மேலும் சுய தியாகம் உடையது, நாம் எவ்வளவு பாவம் செய்தாலும்.

 

கடவுள் நம்மை எந்த அளவிற்கு நிபந்தனையின்றி அன்பு செய்கிறார் என்பதை  புனித திருமனமானது, நமக்கு காட்டுகிறார். அந்த அன்பு, நாம் நன்றாக இருந்தாலும், மோசமான் நிலையில் இருந்தாலும்,  நோய் வாய் பட்டிருந்தாலும், நல்ல சுகமாக இருந்தாலும், பனக்காரனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும், எல்லா நேரங்களிலும் நமக்கு கிடைக்கும். புனித திருமனத்தில், கணவன் அவருடைய வாழ்க்கையை மனைவிக்கும், மனைவி அவருடைய வாழ்க்கையை கணவனுக்கும் அர்ப்பனிக்கின்றனர். கிறிஸ்து எப்படி அவர் வாழ்வை நமக்கு இந்த திருச்சபைக்கு சேவை செய்ய அர்ப்பனித்தாரோ, அதே போல் நாமும் மனப்பென்னாக நம் வாழ்வை அவருக்கு அர்ப்பனிக்க வேண்டும்.

 

கத்தோலிக்க  பாதிரியார், விவாகரத்து பெற்றவர்களுக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்கள். (அல்லது, முதல் திருமணம், உணமையான இணைதல் இல்லாமல் இருந்தால் மட்டும் அனுமதிப்பார்கள்). ஏனெனில், திருமணம் மிகவும் புனிதமானது. அந்த ஒன்றிப்பு, எப்படி கிறிஸ்துவிற்கும் தந்தைக்கும் உள்ள இணைப்பு போல் புனிதமானது. நாமும் கடவுளின் அன்பு சேவையாக நாமும் இந்த ஒன்றிப்பை எடுத்து காட்டாக செய்ய வேண்டும்.

 

இதே ஒன்றிப்பு, எல்லா விதமான உறவிலும் புனிதமானது, மற்றும் உண்மையானது. இரண்டு அல்லது அதற்கு மேலும் யாராவது சேரும்போது, அது நட்பாக இருந்தாலும், பங்கு குழுவாக இருந்தாலும், அல்லது மத குழுவாக இருந்தாலும், இந்த ஒன்றிப்பு புனிதமாக இருக்க வேண்டும். ஆனால், நாம் எந்த அள்விற்கு இந்த ஒன்றிப்பினை காக்க முயற்சி செய்கிறோம். எவ்வளவு மோசமாகவும், மத மாற்றத்திற்கு எதிராகவும், நமது கிறிஸ்துவின் உடல் பிரிந்து இருக்கிறது!

 

கடவுளால் உண்டாக்கபட்ட எல்லா இணைப்புகளும் புனிதமானது. (கிறிஸ்து நம்மோடு உலகில் இருப்பதும், அவரின் சக்தியும் இந்த இணைப்பில் உள்ளது.) ஒவ்வொரு உறவும், உலகிற்கு யேசுவின் உன்மையான அடையாளத்தையும், அவரின் தியாகத்தையும் காட்டும் படிப்பினையாகும். ஆனால், எல்லோரும் கடவுளுக்கு சேவை செய்து கொண்டு, எவ்விதமான ஒன்றிப்பும் இல்லாமலும், நிபந்தனை அற்ற அன்பு இல்லாமலும், எவ்வித குழுவோடும் இனையாமலும் இருப்பது வெட்க கேடானது.

 

 

Advertisements